மஹா அனுஷம் ஸ்பெஷல் பாடல் . மஹா பெரியவா சரணம் உன் பாதம்

Kamakodi Muthukrishnan
Kamakodi Muthukrishnan
15.5 هزار بار بازدید - پارسال - Lyrics :Shri Jay Kay Kannan.Singers
Lyrics :Shri Jay Kay Kannan.

Singers :Bichandar Kovil Slogam group


0. கணபதி காப்பு
குழந்தை ஸ்வாமியென்றே குதூஹலமாய்ப் பாடினார்
குழந்தைச் சிரிப்பில் மஹா சந்திர சேகர குருவும்
குமரனவன் அண்ணனைக் கும்பிட்டுப் பாடுகிறேன்
என் குரு மஹா பெரியவாளைப் பாடிப் போற்றிடவே
பெருந் தொந்தி விநாயகனே கரியே கற்கண்டே
பெருமையாய்ப் பேரின்ப மருள்வாய் அறுமுகச்சிவன் அண்ணனே

1.
நகரமதில் ரத்தினமாம் காமாக்ஷி அன்னை யவள் காஞ்சி நகர்
தேவியவள் நாபி பாகம் இடையது விழுந்தயிடம்
நாடுவதில் பேரின்பம் நடு நாயகக் காஞ்சிமடம்
ஓங்காரத் தல நாயகன் ஸதாஸிவ ரூபன் சந்த்ர சேகர ஸ்வாமியுறை
ஒப்பற்ற தலமாம் மன மென்றுமுறை மஹா காஞ்சி மாண்பாம்  



2.
அசைக்கா விழியொடு அமர்ந்த தேவரும் இமைக்கா மனதொடு
விழையும் பாதமதை தவமிலாது சிவமு மிலாது திரியும்
எமையுமொரு  பொருட்டாய் மதித்து   சுணக்கமிலாது தரும்
கணக்கிலா அருளே மஹா பெரியவா சரணமுன் பாதம்

3.
பாடாண் திணையே பரம் பொருள் சிவனே கனியே கற்கண்டே
கூடாம் சிதிலம் கொள் முதலாய்க் கொண்டயெமை
கேடாம் வலை மீட்டுக் கோளாய் உயர்த்திய பெருங்கோவே
மூலமாம் முதலே மஹா பெரியவா சரணமுன் பாதம்

4
கோடி கடந்தேன் கொள்வினை கொண்டேன் சிரித் தழுதேன்
நாடி யுருக்கும் நயம் பல கண்டேன் பயம் பல கடந்தேன்
திகட்டுமென அறிந்திலாது தேடிப் பல திரிந்து உழன்றேன்
வாடா தெனை மலர்த்திய மஹா பெரியவா சரணமுன் பாதம்

5.
முல்லை வாரிதி மோஹனக் கடலாய் முழு மதி  ஒளியே
எல்லை ஏதுமுண்டோ இல்லை என்பதே இல்லாத உனக்கே
சொல்லைத் தேடி பொருள் தொலைத்த தொல்லை யவனியில்
தல்லை கொண்டெமைக் காக்கும் மஹா பெரியவா சரணமுன் பாதம்

தல்லை- தெப்பம்

6.
விண்ணளாவு விரிமேனி விஸ்வரூபமாயுனைக் கண்ட பின்
கண்ணளாவுமோ வருத்தும் கருத்த பொருள் பலவும்  
எண்ணளாவுமே மனமும் உனைத் தொழ யென்றும்
மனமுலாவும் மாண்பே மஹா பெரியவா சரணமுன் பாதம்

7.
எண்ணருஞ் சிறப்பிலே எழுந்து நின்றுனை ஏற்றமாய்ப் பாட
கண்ணருஞ் சொல்லெடுத்துப் புனைந்திடும்போதே
மனதருகிப் புனைகிறாய் சொல்லாய்ப் பொருளாய்
எனதருகே நின்றுறை மஹா பெரியவா சரணமுன் பாதம்

8.
காமாட்சி ரூபமே காமகோடி நிலையே கண்ணே மணியே
கோடி ஸூர்ய கிரணமே அருங் கிரணப் பொழிவே
சூழ்ந்திட உன்னை சகலமும் பெறுவோம் சுகமாய்த் திரிவோம்
வாழ்ந்திடும் கணமெலாம் மஹா பெரியவா சரணமுன் பாதம்

9
சந்திர சேகரா சீரிய தயாளா ஸதா சிவ ரூபா தயாபர குருவே
அத்துணை தெய்வமும் ஒருங்கிய உருவே குமரா முருகா
எத்துணை  புண்ணியம் செய்தோம் யாமே உம்மை யறிந்திட
நற்துணை நாயக மஹா பெரியவா சரணமுன் பாதம்

10
திரிபுர சுந்தரி சந்திர மௌலி திகழ் மிகு தேவி ஸௌந்தர்ய காமாட்சி
தேடியே நின்னை தேவரும் வேண்ட திகட்டா தெம்மிடம்
திவ்யமாய் நின்றாய் தவ மெது எமக்கே தவமா யுனைப் பெற
பவ்யமாய்ப் பணிகிறோம் மஹா பெரியவா சரணமுன் பாதம்

11
தெய்வத்தின் குரலைத் தினமும் கேட்கிறோம்
தேவாமிர்தமாய்ச் செவி குளிர நிறைகிறோம்
நின் திருமுகம் நோக்கியே மனமும் தெளிகிறோம்
உன் பதமெம் சிரம் மஹா பெரியவா சரணமுன் பாதம்

12
எத்தனை பிறவி எத்தனை உருவம் இத்தனை கடந்து
உன்னிடம் சேர்ந்தோம் பித்தனாய் நின்றோம் அத்தனே எம்மை
அணைத்தே ரட்சிப்பாய் அண்டியே நின்றோம் அன்பிலே உன்னில்
பிணைத்தோம் எமையே மஹா பெரியவா சரணமுன் பாதம்

13
ஊறுதே கண்ணில் வற்றாத சுணையாய் உன்னை நினைந்திட
பெருநீர் வீழ்ச்சியாய் – கட்டுக் கடங்குமோ காருண்ய மூர்த்தியே
நின்பாதம் நிறைந்தே நனைக்கின்றோம் எம்மன்பில் ஆறாது
சரணம் சரணம் மஹா பெரியவா சரணமுன் பாதம்

பலஸ்ருதி

பெரியவா புகழை மனமுருகிப் பாடிட
உயிரெலாம் செழிக்கும் ஆன்மம் தழைக்கும்
மாண்புடன் உருகிட மஹா கணம் பொருந்தும்
பெரியவா புகுந்தே பெருமழையாய்ப் பொழிந்த
பேருவகை இப்பாடல் அத்தனையும் அவரதே
பொருத்தி எழுத வைத்த கருணையும் அவரதே

Jay Kay Kannan
پارسال در تاریخ 1402/03/13 منتشر شده است.
15,524 بـار بازدید شده
... بیشتر