ஸ்ரீ மஹா பெரியவாளின் 108 போற்றி

Kamakodi Muthukrishnan
Kamakodi Muthukrishnan
6.1 هزار بار بازدید - 7 ماه پیش - எழுதியவர்: ஸ்ரீ மதி காமாக்ஷி முத்து
எழுதியவர்: ஸ்ரீ மதி காமாக்ஷி முத்து கிருஷ்ணன்
சொல்பவர்:  ஸ்ரீ. ஸ்ரீ காந்த் ஸ்ரீதரன்


1,மகா லக்ஷ்மி சுப்பிரமணியரின் தவப்புதல்வா போற்றி.
2.ஸ்வாமி நாதனாய் உதித்தவரே போற்றி.
3.  சந்திர சேகர குருவாய் மலர்ந்தாய்
போற்றி.
4.அனுஷ நட்சத்திரத்தில் உதித்தவரே போற்றி.
5. சன்மார்கம் காக்க வந்த சத்குருவே போற்றி.
6. ஆதி சங்கரர் அடி பற்றிய குருவே போற்றி.
7. தன்னை மறந்து தவம் செய்த தவமே போற்றி
8. வேதப் பொருளே போற்றி.
9. வேதியர்கள் போற்றும்குருவே போற்றி .
10.வேதாந்த சாரம் உரைத்தவரே போற்றி.
11. இருளை அகற்றும் ஒளியே  போற்றி.
12.இன்னல் தீர்க்கும் குருவே போற்றி.
13. ஈகைக் குணம் கொண்டவரே போற்றி.
14.சந்திர மௌலிஸ்வர பூஜை செய்தவரே போற்றி.
15. எளியவர்க்கும் எளியவரானாய் போற்றி.
16. கருணை விழியால் காப்பாய் போற்றி.
17. காமாக்ஷியை தர்ஸனம் செய்த கருணா மூர்த்தி போற்றி.
18. கற்பகத் தருவே போற்றி.
19குருவாய் வந்தருளிய சிவனே போற்றி.
20.ஏழ்மை அகற்றுபவரே போற்றி.
21. ஏகாந்தப் பிரியரே போற்றி.
22. எங்கும் நிறைந்த சிவனே போற்றி.
23.நானிலம் போற்றும் நற்குருவே போற்றி.
24.சங்கடம் தீர்க்கும் சங்கரா போற்றி.
25சதுர்மறை காத்தருளிய சற்குருவே போற்றி.
26.ஸாயுஜ்யம் தந்திடும் சங்கரா போற்றி.
27.ஆன்ம நெறி தழைக்கச் செய்தவரே போற்றி.
28. தெய்வத்தின் குரலாய் ஓலிப்பாய் போற்றி.
29.காமகோடி பீடத்தை அலங்கரித்தவரே போற்றி.
30, காஞ்சி மாபுரி செய்த தவமே போற்றி.
31.உலகை உய்விக்க வந்த உத்தம குருவே போற்றி.
32.உன்னடி பணிந்தவரை உய்வித்தருள்வாய் போற்றி.
33.உபதேசங்கள் அருளி உலகை காத்தவரே போற்றி.
34.நான்மறைகள் நன்கே நவின்றவரே போற்றி.
35.ஆன்ம ஞாலம்  தருபவரே போற்றி.
36.அமைதி ஸ்வருபமே போற்றி.
37. ஆனந்த ஒளியேபோற்றி.
38.அத்வைத குருவே போற்றி.
39. அருள் மழை பொழிபவரே போற்றி.
40.இறையைக் கண்டு இறைவன் ஆனாய் போற்றி.
41.சாந்த ஸ்வருபா போற்றி.
42. சத்தியஜோதியே போற்றி.
43.இருபதாம் நூற்றாண்டு கண்ட ஈடு இணையற்ற குருவே போற்றி.
44. கலியுகத்தின கண் கண்ட  தெய்வமே  போற்றி.
45.இறை பணியை இனிதே ஆற்றினாய் போற்றி.
46. கருவிலே திருவுடையவன் ஆனாய் போற்றி.
47. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்தவரே போற்றி.
 48.அருள் ஞான பிரகாஸ சூர்யனே போற்றி.
49.தாயாய் நின்று தரணி காத்த குருவே போற்றி.
50. தயை புரிவாய் போற்றி.
51. நல் எண்ணம் நல்கும் நாயகரே போற்றி.
52.மாயயை நீக்கும் மாதவப் பயனே போற்றி.
53.முக்தியைத் தருவாய் போற்றி.
54.சிந்தையில் சிவனை நிறுத்திய சிவமே போற்றி.
55. பட்டினப் பிரவேசம் செய்தே பாரதம் காத்தாய் போற்றி.
56.ஆன்மீக பெட்டகமே போற்றி.
57.ஆரோக்கியம் அருளும் குருவே போற்றி.
58.அகிலத்தையே அன்பால  கட்டிக் காத்த  அருட் கடலே போற்றி.
59. சிவானுபூதி பெற்றவரே போற்றி.
60.நாடியவர் யாவர்க்கும் நன்மை நல்கிய குருவே  போற்றி.
61. உன்னத அமைதி  அருள்வாய் போற்றி.
62.ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி.
63.உலகம் போற்றும் உத்தம குருவே போற்றி.
64.சந்நிதி வந்தவரை சாந்தமுடன் காத்தருள்வாய் போற்றி.
66.சரண்அடைந்தோம் போற்றி.
67.திக்கற்றவரைக் காப்பவரே போற்றி.
68. தீரா வினை தீர்ப்பவரேபோற்றி.
69, தேனினும் இனியாய் போற்றி.
70.தேவாதி தேவா போற்றி.
71.மாசிலா மணியே போற்றி.
72. மாதவனருள் பெற்றவரே போற்றி.
73.இதிகாச  புராணம் உரைத்தவரே போற்றி.
74. லிங்க ரூபமாய் அருள்வாய் போற்றி.
75. சம்சார ஸாகரம் கடக்க உதவும் தோணியப்பரே போற்றி.
76. பிழைதனை பொறுத்தருளும் குருவே  போற்றி.
77.பொய்மை கலவாது வாழும் வரம்தருவாய் போற்றி.
78. ஞானம் பெறவே நீ நயந்தருள்வாய் போற்றி.
79. பிறவிப் பயனை அடையச் செய்வாய் போற்றி.
80.பிறவா நிலை தருபவரே போற்றி.
81. மங்கலங்கள் தருவாய் போற்றி.
82.மன அமைதி வேண்டி நின்றோம் போற்றி.
83.முன் வினை தீர்ப்பாய்  போற்றி.
84. உபநிடத சாரம் உரைத்தாய் போற்றி.
85.அருள் மழை பொழிவாய் போற்றி.
86.சரண் அடைந்தோம் போற்றி.
87.தமிழகத்தின் தவ முனியே போற்றி.
88..தும்பிக்கையானை துதித்தவரே  போற்றி.
89 தர்மம் காக்க வந்த தவமுனியே போற்றி.
90. ஆராதனை செய்திட அருள்வாய் போற்றி.
91.பாதமலர் பற்றினோம் போற்றி.
92.பக்தியைத் தருவாய் போற்றி.
93. பரமாசார்ய குருவே போற்றி.
94.முக்காலமும் உணர்ந்த ஞானியே போற்றி.
95. எங்கும் எப்போதும் எங்களைக் காப்பாய் போற்றி.
96. தஞ்சம்  அடைந்தோம் தயை புரிவாய்  போற்றி.
97. காண்பவர் கஷ்டம் தீர்க்கும்
காருண்ய சீலா போற்றி.
98.காப்பதே கண்ணாக உள்ள காமகோடி குருவே போற்றி.
99. தன்னை மறந்து தரணி வாழ்ந்திட தவத்தில் திளைத்த தவப்பயனே போற்றி.
100. வசித்தால் முக்தியாம் காஞ்சிதனில் வந்தவர்க்கும் முக்தியளித்த சிவகுருவே போற்றி.
  101.பிறவிப் பிணி தீர்பபவரே போற்றி .
102, பிறவா நிலை அருள்வாய் போற்றி.
103 .காமாட்சி  ரூபமே  சங்கரா போற்றி
104 .எந்நாட்டவரும் போற்றும் சிவ குருவே போற்றி .
105, காஞ்சியின் கருணைக் கடலே சங்கர குருவே போற்றி.
105, மஹா பெரியவா போற்றி போற்றி.
106. சந்திர சேகர  குருவே போற்றி.
107, ஜெய ஜெய சங்கரா போற்றி.
108. தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைதனை பொறுத்தருள்வாய் போற்றி.
சங்கர குருவே  சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏
7 ماه پیش در تاریخ 1402/10/18 منتشر شده است.
6,163 بـار بازدید شده
... بیشتر