உங்கள் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த பிரம்மபுரீஸ்வரர் | Brahmapureeswarar Temple Tirupattur

Aalayam Selveer
Aalayam Selveer
874 هزار بار بازدید - 6 سال پیش - Brahmapureeswarar Temple is located in
Brahmapureeswarar Temple is located in Thirupattur near Trichy. Person can change his fate by seeking the blessings of Lord Brahma at Sri Brahmapureeswarar Temple, Tirupattur. Location Google Map - Brahma Temple, Thirupattur (அருள்மிகு பிரம்ம சம்பத்கவுரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர்) - https://goo.gl/maps/yNB26cUp63D2?entry=yt Brahmapureeswarar Temple Address: Arulmigu Brahmapureeswarar Temple, Tirupattur, Irrungalur (via), Tiruchchirapalli District, Pincode : : 621 105 , Phone No: +91- 431 2909599 https://goo.gl/maps/yNB26cUp63D2?entry=yt உங்கள் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த பிரம்மபுரீஸ்வரர் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பிரம்மநாயகி. புராணங்கள் கூற்றுப்படி கடவுள் பிரம்மா தான் இவ்வுலகை உருவாக்கியவர். முழுமுதல் கடவுளாகிய நான் தான் சிவனை விட பெரியவன் என்ற அகங்காரம் பிரம்மாவிடம் வந்தது. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தை கொய்து அவரது படைத்தல் அதிகாரத்தை நீக்கி சாபம் இட்டார். இச்சாபத்தில் இருந்து விடுபட சிவனை வேண்டி பிரம்மா சிவாலயங்களுக்கு யாத்திரையை தொடங்கினார். அப் புனித யாத்திரையின் போது இத்தலத்திற்கு வந்து 12 சிவ லிங்ககளை பிரதிஷ்டை செய்து பிரம்மபுரீசுரவரை வழிப்பட்டார். பிரம்மாவின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று மகிழ மரத்தின் கிழ் அவருக்கு தரிசனம் கொடுத்து சாப விமோசனம் கொடுத்தார். பிரம்மா அவரின் படைத்தல் அதிகாரத்தை திரும்பப் பெற்றார். சிவன் பிரம்மாவை வாழ்த்தி அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உருவாக்கி அருளினார். மேலும் சிவன் இத்தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் படி பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார். இதனால் திருப்பட்டுர் பிரம்மாவை தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை. இத்தலம் மிக பழமையானது. பதஞ்சலி,வியாகிரபாதர் மற்றும் காசியபர் ஆகியோர் சிவனை தரிசித்து முக்தி அடைந்த தலங்கள். இத்தலத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கயிலாசநாதர் திருக்கோயில் காலத்தால் முற்பட்ட கற்றளியாகும். அழகே உருவான இக்கோயிலின் ஆதிதளம் காந்தார அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆதிதளத்தின் ஒவ்வொரு சுவரும் ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட்டு, ஒடுக்கங்களுடன் அமைந்துள்ளன. (Source : https://ta.wikipedia.org/s/4ovs) #aalayamselveer #brahmapureeswarar #brahmatemple
6 سال پیش در تاریخ 1397/06/12 منتشر شده است.
874,027 بـار بازدید شده
... بیشتر