ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பேராசிரியர் திருவை அப்துர் ரஹ்மான்

Hajith Ibrahim
Hajith Ibrahim
13.1 هزار بار بازدید - 5 ماه پیش - ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா நபி
ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா நபி நாயகம் அல்லவா கானத்தில் நான் அதை கொஞ்சம் இங்கு சொல்லவா ஞானத்தின் திறவுகோல் ------------------------------------------------------------------------------------------------------------- பேராசிரியர் திருவை அப்துர் ரஹ்மான் அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா" என்ற பாடல். -------------------------------------------------------------------------------------------------------------- LYRICS ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா நபி நாயகம் அல்லவா கானத்தில் நான் அதை கொஞ்சம் இங்கு சொல்லவா ஞானத்தின் திறவுகோல் சரணம் 1 பள்ளி சென்று படித்ததில்லை பாடம் ஏதும் கேட்டதில்லை சொல்லித்தரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை அல்லாவே ஆசிரியன் அனைத்துமே ஆச்சரியம் சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே ஞானத்தின் திறவுகோல். சரணம் 2 வானமதைப் பார்த்திருந்தார் வள்ளல் நபி சிந்தித்தார் காண் மலைக் கடல் அலையைக் கண்டிறையைப் புகழ்ந்திட்டார் இறைவன் சொல்லித் தந்தான் ஏந்தல்நபி அள்ளிக் கொண்டார் சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே ஞானத்தின் திறவுகோல் சரணம் 3 ஹீரா வென்னும் மலைக் குகையே இள நிலைப் பள்ளிக் கூடம் சீரான வஹீ மூலம் சிந்தனையாய் பல பாடம் ஜிப்ரீல் ஏந்தி வந்தார் சாந்த நபி எழுதிக் கொண்டார் சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே ஞானத்தின் திறவுகோல் சரணம் 4 கலிமா தொழுகை நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜுடனே பழுது ஏதும் இல்லாத பண்பான வாழ்க்கை முறை வகுப்புகள் நடந்தனவே வாஞ்சை நபி தொடர்ந்தனரே சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே ஞானத்தின் திறவுகோல் சரணம் 5 பொருளியல் அரசியலில் புதுமை விஞ்ஞானமதில் அருளியல் இல்லறத்தில் ஆன்மீக வழிமுறையில் எத்துறையும் கற்றிருந்தார் ஏகன் அருள் பெற்றுயர்ந்தார் சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே ஞானத்தின் திறவுகோல் சரணம் 6 பண்பான நபி பெருமான் பல்கலைக் கழகமன்றோ அன்பான மாணவராம் அவர் வழி உம்மத் தன்றே தேர்வினிலே வென்றிடுவோம் தீன் வழியில் நின்றிடுவோம் சொன்னதெல்லாம் நீதிகளே! சத்தியத்தின் சேதிகளே ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா நபி நாயகம் அல்லவா கானத்தில் நான் அதை கொஞ்சம் இங்கு சொல்லவா ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா நபி நாயகம் அல்லவா ரசூல் நாயகம் அல்லவா கானத்தில் நான் அதை கொஞ்சம் இங்கு சொல்லவா. ***********************************************
5 ماه پیش در تاریخ 1403/01/17 منتشر شده است.
13,123 بـار بازدید شده
... بیشتر