கம்பு இட்லி செய்முறை /How to prepare millet idly /Millet idly recipe in tamil/

CHEF MADRAS MURALI kitchen
CHEF MADRAS MURALI kitchen
214.4 هزار بار بازدید - 5 سال پیش - TWITTER      
TWITTER       https://twitter.com/CHEFMADRASMURAL?s=09
 
 FACEBOOK      Facebook: chefmadras

 WEBSITE       http://sreebalaacatering.com
 
 INSTAGRAM     Instagram: chefmadrasmurali
 
 PLAYSTORE     https://play.google.com/store/apps/de...


 #CHEFMADRASMURALI/#HOWTOPREPAREMILLETIDLY/#MILLETIDLYRECIPEINTAMIL/#MILLETIDLY/#VARIETIESOFIDLY

SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs


கம்பு இட்லி செய்ய தேவையான பொருள்கள்

கம்பு 250 கிராம்
உளுந்து 100 கிராம்
உப்பு தேவையான அளவு

கம்பு இட்லி செய்முறை

முதலில் கம்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும் பிறகு கம்பை கை பொறுக்கும் சூடு அளவுக்கு வறுக்க வேண்டும் சிறிது அதிகமாக இருந்தாலும் தப்பு இல்லை ஆனால் கருககூடாது பிறகு இரண்டு முறை அலசி விட்டு இந்தக் கம்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் உளுந்தையும் தனியாக ஒரு ஒரு மணி நேரம் அளவுக்கு ஊற வைக்க வேண்டும் பிறகு கம்பை ஊற வைத்த தண்ணியை கீழே கொட்டாமல் கம்பை அரைக்கும் பொழுது அதில் சேர்த்து அரைத்தால் கம்பின் வருத்தம் வாசனை மாவிலேயே இருக்கும் பிறகு உளுந்தை வடை மாவு பதத்திற்கு அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும் கம்பு அரைக்கும் பொழுது சிறிது லூசாக அரைக்கவேண்டும் அதையும் மேலே வீடியோவில் நான் காண்பித்து உள்ளவாறு அரைத்துக் கொள்ள வேண்டும் பிறகு கம்பு மாவு பிளஸ் அரைத்த வடை மாவு பதத்துக்கு உள்ள உளுந்து மாவு இரண்டையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் மாவை கிளறாமல் தனியாக எடுத்து வைக்க வேண்டும் அப்போதுதான் மாவு புளிப்புத்தன்மை ஏற்பட்டு உப்புசமாக வரும் இதில் ஆப்ப சோடா என்பது சேர்க்கவே வேண்டாம் அதேபோல் ஒரு சில பேர் கம்பு மாவையும் யூஸ் பண்ணுவார்கள் ஒரு சில பேர் கம்பு பிளஸ் அரிசி உளுந்து இவற்றையும் யூஸ் பண்ணுவார்கள் ஆனால் நான் கம்பு +உளுந்து இரண்டை மட்டுமே சேர்த்துள்ளேன் இப்பொழுது நமக்கு மாவு ரெடி ஆகிவிட்டது தயவுசெய்து இந்த மாவை கைகளாலோ அல்லது கரண்டியாலோ கலக்கக்கூடாது பிறகு இட்லி தட்டில் சிறிது ஆயில் ஊற்றி கலக்காமல் மாவை ஊற்றவும் இப்பொழுது இட்லி வேகவைப்பது போல் சுமார் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும் பிறகு எடுத்து சிறிது ஆற வைத்து இட்லி எடுத்தால் பஞ்சு போல கம்பு இட்லி வரும் இவை அனைத்தையும் வீடியோவில் உங்களுக்கு நான் காண்பித்து உள்ளேன் இதற்கு மிளகாய் பொடி அல்லது காரச் சட்னி  சேர்த்து சாப்பிடலாம் இப்பொழுது சுவையான கம்பு இட்லி ரெடி

குறிப்பாக கம்பு இட்லி ஒரு போதும் வயதானவர்களுக்கு இரவில் வேகு நேரம் கழித்து சாப்பிட வைக்க வேண்டாம் காரணம் இந்த கம்பு இட்லி செரிமானத்தன்மை மிகவும் தாமதமாக ஆகும் என்பதால் வயதானவர்களுக்கு இரவு நேரத்தில் கொடுக்க வேண்டாம்

கம்பு இட்லி செய்முறை

கம்பு இட்லி எப்படி செய்வது

ஈஸியாக கம்பு இட்லி எப்படி செய்வது

How to make  millet idly

How to prepare millet idly

MILLET IDLY RECIPE INTAMIL

millet idly eppadi seivadhu

millet idly preparation
5 سال پیش در تاریخ 1398/04/25 منتشر شده است.
214,492 بـار بازدید شده
... بیشتر