Ch43 Autobiography of a Yogi (Tamil) | ஸ்ரீ யுக்தேஸ்வர்‌ மீண்டும்‌ உயிர்த்தெழுகிறார்

Yogoda Satsanga Society of India
Yogoda Satsanga Society of India
10.7 هزار بار بازدید - 3 سال پیش - யோக தத்துவத்தின் மையத்திற்கு ஊடுருவிச் செல்லும்
யோக தத்துவத்தின் மையத்திற்கு ஊடுருவிச் செல்லும் ஓர் ஆடியோ புத்தகமான,  பரமஹம்ஸ யோகானந்தரின் ஒப்பற்ற வாழ்க்கை வரலாறு, மகான்கள் மற்றும் யோகிகள், விஞ்ஞானம் மற்றும் அற்புதங்கள், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய உலகத்தைப் பற்றிய மறக்க முடியாத ஆய்வுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
உலகம் முழுவதும் ஓர் ஆன்மீகப் பொக்கிஷமாகப் போற்றப்படும், மிக அதிகமாக விற்பனையாகும் இந்த இலக்கியம் இலட்சக்கணக்கானவர்களை ஒரு புதிய, ஆழ்ந்த திருப்தியளிக்கும் வாழ்க்கை முறைக்கு தம்மையே மாற்றிக் கொள்ளத் தொடங்குவதற்கு மனவெழுச்சியூட்டியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் அசாதாரணமான வாழ்க்கை வரலாற்றின் ஞானம், நகைச்சுவை, உத்வேகம் ஆகிய அனைத்தும் பேசும் வார்த்தையின் உடனடித் தன்மையில் வெளிப்படுகிறது.

இப் புத்தகத்திற்குப்  புதியவர்களும், இதை நீண்ட கால விலைமதிப்பற்ற  துணையாக வைத்திருப்போரும்  தொழில்ரீதியாக வாசிக்கும் ஒருவரின் உணர்வுபூர்வமான, அழுத்தமான வாசிப்பை வரவேற்பார்கள்.  இந்த வாசிப்பானது,  பரமஹம்ஸ யோகானந்தரின் பல வண்ணமயமான நிகழ்வுகளின் வசீகரத்தை வசப்படுத்தியுள்ளது, அத்துடன் ஆசிரியரின் ஆன்மீக அனுபவங்கள், பிற மகான்களுடனான சந்திப்புகள், வாழ்க்கையின் அடிப்படை புதிர்களைப் பற்றிய ஞானஒளியூட்டும் ஆய்வுகள் ஆகிய வளமான சித்திரத் திரைக்கு உயிர்ப்பூட்டுகிறது.

இந்த ஆடியோ புத்தகம், பதிப்பு சுருக்கப்படாத mp3 - இல் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது:
https://bookstore.yssofindia.org/prod...

1946 - இல்  புத்தகம் வெளியிடப்பட்ட பிறகு, உலக ஊடகங்கள் இந்த புத்தகத்திற்கு தொடர்ந்து பாராட்டு மழை பொழிந்தன. 1999 - ல், இது "நூற்றாண்டின் 100 மிகச் சிறந்த ஆன்மீகப் புத்தகங்களில்" ஒன்றாகக் கௌரவிக்கப்பட்டது.
https://yssofindia.org/paramahansa-yo...

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் பிற வீடியோக்களை காண:
yoganandayss

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பற்றி மேலும் அறிக: https://yssofindia.org

#Spirituality
#Yogananda
#Audiobook
#HowToLive
#YSS
#SRF
#YogodaSatsangaSociety
#KriyaYoga
#AutobiographyofaYogi
#ParamahansaYogananda
#MahavatarBabaji
3 سال پیش در تاریخ 1400/10/24 منتشر شده است.
10,777 بـار بازدید شده
... بیشتر