அருணாச்சல் ராஜஸ்தான் மாநிலங்கள் அறிவிப்பு Arunachala Pradesh | Rajasthan | Agni veer Scheme |Govt jo

Dinamalar
Dinamalar
5.1 هزار بار بازدید - ماه قبل - இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டம்
இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டம் 2022ல் அறிமுகம் செய்யப்பட்டது. பதினேழரை முதல் 23 வயது வரை உள்ளவர்கள், திட்டத்தில் சேர்ந்து தரைப்படை, கப்பல் படை, விமானப் படைகளில் 4 ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம். ஒப்பந்த காலம் முடிந்த பின் அவர்களில், 25 சதவீதம் பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு, மத்திய ஆயுத படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை பின்பற்றி, ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தராகண்ட், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் அரசு பணியில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முன்வந்துள்ளது. தற்போது, அருணாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களும் அக்னி வீரர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளன. அக்னிபாத் திட்டத்தை இண்டி கூட்டணி கட்சிகள் எதிர்க்கின்றன. ஓய்வு பெறும் அக்னி வீரர்களின் எதிர்காலம் பற்றி அவர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாஜ ஆளும் மாநிலங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றன.#Arunachala #Pradesh #Rajasthan #Agni #veer #Scheme
ماه قبل در تاریخ 1403/05/06 منتشر شده است.
5,151 بـار بازدید شده
... بیشتر