கண்புரை அறுவைசிகிச்சைக்கு இனி பயப்படத் தேவையில்லை!| Tamil

Modasta Tamil
Modasta Tamil
62.4 هزار بار بازدید - 7 سال پیش - பெங்களூருவில் உள்ள தி ஐ ஃபவுண்டேசன்
பெங்களூருவில் உள்ள தி ஐ ஃபவுண்டேசன் தலைவர், கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். D. ராமமூர்த்தி கண்புரை அறுவை சிகிச்சை குறித்த அனைத்தையும் விவரிக்கிறார்.

கண்ணின் லென்ஸ் அதன் தெளிவை இழந்து, ஒளி ஊடுருவும் தன்மையை இழந்துவிடுவது கண்புரை என அழைக்கப்படுகிறது.பொதுவாக, வயதாவதன் காரணமாக இது நிகழ்கிறது.கண் லென்ஸின் மங்கலான நிலை பார்க்கும் திறன் குறைய வழிவகுத்து நமது வழக்கமான செயல்பாடு தடைபடுகிறது.பெரும்பாலும், இரண்டு கண்களுமே இதனால் பாதிக்கப்படுகின்றன. ஒரு கண்ணை விட மற்றொரு கண்ணில் கண்புரை பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடும். கண்ணாடிகளோ அல்லது காண்டாக்ட் லென்ஸ்களோ கண்புரைக்கு பலனுள்ளதாக இருப்பதில்லை.இதற்கு ஒரே பலனுள்ள சிகிச்சை கண்புரை அறுவை சிகிச்சையாகும்.

கண்புரை அறுவை சிகிச்சையில் ஒளி ஊடுருவும் தன்மையை இழந்த லென்ஸுக்கு பதிலாக இண்ட்ராகுலர் லென்ஸ் (IOL) எனப்படும் செயற்கை லென்ஸ் மாற்றப்படும். தற்போது, லேசர் சிசிச்சையும் கூட இதற்கு இருக்கிறது.

"இந்த அறுவை சிகிச்சை நோயாளியின் பார்க்கும் திறனை கூடியமட்டிலும் மிகச்சிறந்த நிலைக்கு மீட்டெடுக்கிறது.கண்புரை அறுவை சிகிச்சை இந்நாட்களில் மிகவும் பாதுகாப்பானதாகவும் மற்றும் பலனளிப்பதாகவும் உள்ளது. இது வெளிநோயாளி சிகிச்சை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஓரிரு நாட்களில், நீங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் உங்கள் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்."

அறுவை சிகிச்சையின் போது என்ன நிகழும்?

அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரம் முன்பு, உங்கள் மருத்துவர் உங்கள் கண் அளவையும் வடிவத்தையும் தெரிந்து கொள்ள பல அளவீடுகள் எடுத்துக்கொள்வார். கருவிழியின் வளைவையும் கண்ணின் நீளத்தையும் பொறுத்து செயற்கை லென்ஸ் தேர்வு செய்யப்படும்.உங்களது தேவைக்கேற்ப லென்ஸிற்கான செலவு மாறுபடும்.

அறுவை சிகிச்சைக்கு 6 மணி நேரத்திற்கு முன்பு திட உணவை சாப்பிட வேண்டாம் என உங்களுக்கு அறிவுறுத்தப்படலாம். மேலும் நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் சிலவற்றை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படலாம்.அறுவை சிகிச்சைக்கு முன்னர் உங்கள் கண்களுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு மரத்துப்போகச் செய்யப்படும்.மருத்துவர் கண்ணில் சிறிய கீறல்கள் ஏற்படுத்தி பாதிப்படைந்த லென்ஸை உடைப்பார்.உடைந்த இயற்கையான லென்ஸ் அகற்றப்பட்டு, ஒரு செயற்கை லென்ஸ் அதன் இடத்தில் பொருத்தப்படும்.முழு செயல்முறைக்கும் சுமார் 30-60 நிமிடங்கள் வரை ஆகும்.பின்னர், அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.

மருத்துவரின் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும், தொடர் சோதனைகளுக்கு உங்கள் மருத்துவரைப் பார்க்கவும்.


Is Cataract Surgery Scary?
Modasta provides you authenticated health care articles, information and doctor videos. Get the accurate healthcare information.

Like us! Facebook: modasta
Tweet us! Twitter: ModastaHealth
Visit us - https://www.modasta.com/
7 سال پیش در تاریخ 1396/07/19 منتشر شده است.
62,435 بـار بازدید شده
... بیشتر