who is lord parasuraman ❓

Aanmeega Ragasiyam
Aanmeega Ragasiyam
133.3 هزار بار بازدید - پارسال - untold story of parasurama and
untold story of parasurama and 6th avatar of lord Vishnu mysterious facts about parasuraman 🔥🔥🔥
🔥 powerful god // who is parasuraman ?
பரசுராமர்:
விஷ்ணுவின் பத்து அவதாரங்களை இணைத்து ‘தசாவதராம்’ என்று அழைக்கப்படுகின்றன. அநீதி மற்றும் அதர்மத்தின் பிடியில் மனிதன் தன்னை இழக்கும்போது, மனிதர்களுக்கு  சரியான பாதையைக் காட்ட விஷ்ணு அவதாரம் நிகழும். பத்து அவதாரங்களில் பரசுராம அவதாரமும் ஒன்று ஆகும். இது திருமாலின் ஆறாவது அவதாரம் ஆகும். இவர் ஜமதக்னி என்ற முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் பிறந்த தவப் புதல்வர் ஆவார். கடுந் தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து பரசு என்ற கோடாலியைப் பெற்ற காரணத்தால் இவர் பரசுராமர் என்று அழைக்கப்பட்டார்.  
பரசுராமரின் பராக்கிரம வரலாறு:
\கார்த்தவீரியன் என்ற அரசன்  ஒரு  நாள் தனது படையுடன் வேட்டைக்குச் சென்றான்.  வேட்டையை முடித்து களைத்துப் போன கார்த்தவீரியன், தந்து அரசவைக்குத் திரும்பும்  வழியில் ஜமதக்னி முனிவரின்  ஆசிரமத்திற்கு வந்தார். முனிவரும் கார்த்தவீரியனுக்கு அறுசுவை உணவு மற்றும் பானங்களை  அளித்து இளைப்பாற வசதிகளும் செய்து கொடுத்தார். கார்த்தவீரியனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு முனிவரின் ஆசிரமத்தில் இந்த அளவு வசதியும் செல்வமும் எப்படி இருக்கும் என்று மனதில் தோன்றிய தனது சந்தேகத்தை கார்த்தவீரியன் ஜமதக்னி முனிவரிடம்  கேட்டான்.   அதற்கு ஜமதக்னி முனிவர் தான் ஒரு தேவலோகப் பசு ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன் பெயர் காமதேனு என்றும், அது  கேட்டத்தைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது என்றும் கூறினார். அதனை தனக்கு பரிசாக அளிக்கும் படி கார்த்தவீரியன் கேட்க ஜமதக்னி முனிவர் மறுத்து விட்டார். அனால் கார்த்தவீரியன் அந்தப் பசுவை அடைந்தே தீர வேண்டும் என நினைத்தான். எனவே முனிவருக்கு தெரியாமல் ஆசிரம்த்தில் யாரும் அற்ற நேரத்தில்  தனது சேவர்கள் மூலம் அதனை கவர்ந்து சென்று விட்டான்.
இதனால் வருத்தமுற்ற ஜமதக்னி முனிவர், தனது மகனாகிய பரசுராமரிடம் நடந்ததைக் கூறினார். கோபம் கொண்ட பரசுராமர், கார்த்தவீரியனுடன் சண்டையிட்டு  அவர் தலையைக் கொய்து விட்டார். பிறகு அங்கிருந்து காமதேனுப் பசுவைத் திரும்ப மீட்டு தனது தந்தையிடம் ஒப்படைத்தான்.  

இதனைக் கேள்வியுற்ற ஜமதக்னி முனிவர், ஒருவர் செய்த தவறை மன்னிப்பது தானே முறை. நீ காரணமே இல்லாமல் ஒரு அரசனை கொன்று விட்டாயே. அதற்கு பிராயச்சித்தமாக நீ புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள் என்று கூறினார். தந்தையின்  அறிவுரை கேட்டு அவனும் தீரத்த யாத்திரை மேற்கொண்டார்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை:
தந்தையின் வாக்கைக் காப்பாற்ற தசரதராமனின் அவதாரம் என்றால், தந்தை சொல்லை விடவும் சிறந்த மந்திரம் இல்லை என்பதை உலகத்துக்கு உணர்த்துவதற்காக எடுத்த அவதாரம் ஸ்ரீபரசுராம அவதாரம்.தனது கணவனாகிய ஜமதக்னி முனிவரின் பூஜை காரியங்களுக்கு ரேணுகா தேவி ஆற்றிலிருந்து நீர் கொணர்ந்து தருவது வழக்கம்.   ரேணுகா தேவி கற்பு நெறி தவறாதவள். ஆற்றங்கரைக்சென்று மணல் மூலம் பானை போல செய்தால் அவளது கற்பின் நெறி காரணமாக அந்தப் பானையில் நீர் நிற்கும்.  அவ்வாறு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார்.இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?



tags:
power ful god,who is parasuraman,lord parshuram,parshuram,lord shiva,lord vishnu,who is parasurama in tamil,untold facts abour parasuraman,who is parasu,parasuraman entry,parasuram tamil,lord vishnu 6th avataram,PARASURAMAN,mystery of parasuraman,parasuraman full tamil story,parasuraman man untold story,yar inntha parasuraman,who is parasuraman ?,aanmeega ragasiyam,parasuraman story tamil,lord parasuram tamil,lord parasuram story,powerfull god parasuram
🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?🔥 powerful god // who is parasuraman ?

#powerful
#god
#parasuraman
#krishna
#lordparasuraman
#who
#google
#fact
#0
پارسال در تاریخ 1402/05/24 منتشر شده است.
133,366 بـار بازدید شده
... بیشتر