குழந்தைகளின் நெஞ்சு சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்

Wildturmeric Tamil
Wildturmeric Tamil
339.1 هزار بار بازدید - 7 سال پیش - Patti vaithiyam for cough &
Patti vaithiyam for cough & cold in babies. Nenju sali, irumal neenga patti vaithiyam. நெஞ்சு சளி, இருமல் குணமாக மருந்து. இந்த கை வைத்தியத்திற்கு தேவையானவை கருந்துளசி, குறுமிளகு மற்றும் தேன். கருந்துளசி மற்றும் குறுமிளகு இரண்டுமே அருமையான கோழை அகற்றிகள். இந்த கருந்துளசி சாற்றை 3 நாட்கள் தொடர்ந்து கொடுத்துட்டு வந்தீங்கனா குழந்தைகள் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து சீக்கிரமே விடுபடுவார்கள்.

சளி, இருமல் மருந்து செய்முறை:

கருந்துளசி: 1 கைப்பிடி
குறுமிளகு: 2
தேன்: தேவையான அளவு  

செய்முறை:
கருந்துளசி, குறுமிளகு இரண்டையும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். வடிகட்டி தேன் சேர்க்கவும்.

===============================

என் பெயர் ரம்யா, நான் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் கிராமத்தில் நாங்கள் பல வருடங்களாக செய்யும் கை வைத்தியத்தை பதிவு செய்கிறேன்.

===============================

DISCLAIMER: இந்த சேனலில் கூறப்படும்  வைத்தியங்கள் மருத்துவரால் சொல்லப்படுபவை அல்ல, இவை பல வருடங்களாக நாங்கள் எங்கள் வீட்டில் செய்யும் அழகு குறிப்புக்கள் மற்றும் பாட்டி வைத்தியங்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும், என்னால் முடிந்தவரை தெளிவு படுத்துகிறேன்.
7 سال پیش در تاریخ 1396/01/14 منتشر شده است.
339,122 بـار بازدید شده
... بیشتر