சிக்கன் வறுவல் | Chicken Fry In Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Lollipop | Easy Chicken Recipe

HomeCooking Tamil
HomeCooking Tamil
33.4 هزار بار بازدید - 3 سال پیش - சிக்கன் வறுவல் | Chicken Fry
சிக்கன் வறுவல் | Chicken Fry In Tamil | Side Dish |  சிக்கன் லாலிபாப் | Chicken Lollipop In Tamil | Starter | Snacks | Easy Chicken Recipe

#சிக்கன்வறுவல் #chickenfry #spicychicken #chickenrecipes #chicken #சிக்கன்
#சிக்கன்லாலிபாப் #chickenlollipop #lollipop #chickenrecipes #chickenstarter
#nonvegstarter #hemasubramanian #homecookingtamil #starter

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Fry: Chicken Fry Recipe | Fried Chicken
Chicken Lollipop: Chicken Lollipop | Chicken Recipes | ...

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase  
https://www.amazon.in/shop/homecookin...

சிக்கன் வறுவல்
தேவையான பொருட்கள்

சிக்கன் - 1 கிலோ
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
தயிர் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய்

மசாலா விழுது அரைக்க

வெங்காயம் - 1
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி
பச்சை மிளகாய் - 1

செய்முறை
1. சிக்கன் வறுவல் செய்ய ஒரு மசாலா விழுது அரைக்க மிக்ஸ்சியில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. அடுத்து ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் எலுமிச்சைபழச்சாறு, தயிர், அரைத்த மசாலா விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், மல்லி தூள், சாட் மசாலா தூள், கரம் மசாலா தூள், கஷ்மீரி மிளகாய் தூள், சோள மாவு, கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து முப்பது நிமிடத்திற்கு மூடிவைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றிய பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடத்திற்கு பொரிக்கவும்.
4. பத்து நிமிடம் கழித்து இந்த சிக்கன் துண்டுகளை பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் மூடிவைக்கவும்.
5. ஐந்து நிமிடம் கழித்து இந்த சிக்கன் துண்டை எண்ணையில் சேர்த்து முப்பது வினாடி பொரித்து சூடாக பரிமாறவும்.

சிக்கன் லாலிபாப்
தேவையான பொருட்கள்

சிக்கன்'னை ஊறவைக்க

சிக்கன் லாலிபாப் - 6
சோயா சாஸ் - 1 1/2 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்  
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள்
முட்டை - 1
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
மைதா - 1 மேசைக்கரண்டி

சிக்கன் லாலிபாப் செய்ய

எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
சிவப்பு மிளகாய் நறுக்கியது
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
பொரித்த சிக்கன் லாலிபாப்
வெங்காயத்தாள் நறுக்கியது

செய்முறை
1. பாத்திரத்தில், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப், எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், முட்டை ,சோள மாவு, மைதா சேர்த்து நன்கு கலக்கவும்.
2. சிக்கன் துண்டுகளை சாஸ் கலவையில் போட்டு 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
3. ஊறிய சிக்கன் துண்டுகளை, எண்ணையில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
4. கடாயில், எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, சிவப்பு மிளகாய், சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் ஊற்றி கிளறவும்.
6. இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிண்டவும்.
7. இதில் பொரித்த சிக்கன்'னை போட்டு பிரட்டவும்.
8. கடைசியாக இதில் நறுக்கிய வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -Facebook: homecookingtamil

YOUTUBE: homecookingtamil

INSTAGRAM - Instagram: homecookingshow

A Ventuno Production : https://www.ventunotech.com/
3 سال پیش در تاریخ 1400/01/21 منتشر شده است.
33,404 بـار بازدید شده
... بیشتر