வேல் மாறல் மகா மந்திரம் பொருளுடன் (புதிய வடிவில் ) | Vel Maral lyrics & Meaning (New Version)

Kavitha Kameswaran
Kavitha Kameswaran
52 هزار بار بازدید - پارسال - வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்து
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்து அருளிய
தடைகளை நிக்கி உடனுக்குடன் பலன் அருளும் சக்தி வாய்ந்த
பாராயணம்
பாராயணம் செய்யும் முறை:
வேலும் மயிலும் சேவலும் துணை (6  முறை ஓதவும்)
திருத்தணியில்  (12  முறை ஓதவும்)

பாடல் 1,31,36,62
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும்  (திரு)
ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும்.
(வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)

பாடல் 2,32,35,61

திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன்  என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. (12  முறை ஓதவும்)

திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!

பாடல் 3,29,34,64
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் (திரு)

சொற்களால் விவரிக்க முடியாத பெருமையுடைய முருகனது திருவடியைப் புகழ்ந்து போற்றும் திருப்புகழ்ப் பாக்களை ஓதுபவர்களிடம் நிகழ்கின்ற பகையை அழிக்க, கோபித்து ஆக்ரமித்துக் கிளம்பும்.

பாடல் 4,30,33,63
தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் (திரு)

அலங்கார ஆரவாரத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால், எருக்கம் பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று உதவும்.

பாடல் 5,27,40,58
பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் (திரு)

பனை மரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத் துணியை அணிந்துள்ள முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்… அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க அரமாகும்.

பாடல் 6,28,29,57
சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும் (திரு)

சினம் கொண்டு அசுரர்கள் எதிர்த்த போர்க் களத்தில் அளவற்ற அறுபட்ட தலைகள் சிரிக்கும்படியாகவும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியாகவும், வாய்கள் அலறும்படியாகவும், அசுரர்களோடு சாடும்

பாடல் 7,25,38,60
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கோர்துணை யாகும்  (திரு)

தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே,
அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்ற பெருந் துணையாகி அருள்பாலிக்கும்

பாடல் 8,26,37,59
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும்  (திரு)
உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பெருமகிழ்ச்சி பெறும் அளவுக்கு உணவளிக்க நேரிடும்போது, மலர்ந்த தாமரை மலருக்கு ஒப்பான முருகன் திருக்கரத்தில் இருந்தபடியே… அவர் அதன் நுனியை லேசாக அசைத்தவுடன், உணவுப் பொருள்களை விளைத்துச் சேகரித்து வளைத்துக்கொண்டு சேர்த்துவிடும்

பாடல் 9,23,44,54
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் (திரு)

சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப்படைக்கு உருகி, அவர் அடைபட்டிருந்த குகையை இடித்துத் தள்ளி அவரை வெளியேற்றும்.

பாடல் 10,24,43,53
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்  (திரு)

குலிசாயுதத்துடன் விளங்கும் இந்திரன், முன்னொரு காலத்தில் திசைகளில் உள்ள மலைகளில் இருந்து அறுத்துத் தள்ளிய இறக்கைகள் மீண்டும் அம்மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிலே அளவிலா வேகத்துடன் எல்லா உலகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி விரைந்து செல்லும்.
(வேலின் அளவிலா ஆற்றல் அநேக அதிசயம் வாய்ந்தது.)

பாடல் 11,21,42,56
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் (திரு)

பாடல் 12,22,41,55
தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும்  (திரு)

பாடல் 13,19,48,50
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும்     (திரு)

பாடல் 14,20,47,49
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும் (திரு)
பாடல் 15,17,46,52 ,
சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்   (திரு)
பாடல் 16,18,45,51
சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்   (திரு)

பாடல்கள் 11 முதல் 16 வரை பொருள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள link யை பார்க்கவும்

Reference:  https://kaumaram.com/text_new/velmara...
Meaning : https://tamildevotionallyrics.blogspo...
پارسال در تاریخ 1401/12/06 منتشر شده است.
52,088 بـار بازدید شده
... بیشتر