இரவு 10:00 மணி DD தமிழ் செய்திகள் [15.07.2024] #DDதமிழ்செய்திகள் #ddnewstamil

DD Tamil News
DD Tamil News
1.3 هزار بار بازدید - ماه قبل - 1)   பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த
1)   பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோதி மரியாதை - கல்வித்துறையில் காமராஜரின் பங்களிப்பு ஈடு, இணையற்றது என புகழாரம்.

2) அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலை - முதலமைச்சர்களிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
********அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனஉறுதி.

3) ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி எண்கவுன்டர் செய்யப்பட்டிருப்பது திமுக அரசின் தோல்வியைக் காட்டுகிறது - மத்திய இணையமைச்சர் எல் முருகன் விமர்சனம்.

4) காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நாளை  சட்டமன்ற  அனைத்துக் கட்சிகளின் கூட்டம் - முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.

5)  காமராஜர் பிறந்த நாளான இன்று அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

6)  தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - ஜுலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு.

7) நீட் தேர்வை திமுக அரசியலாக்குகிறது- பாஜக மாநில தலைவர் ‍அண்ணாமலை குற்றச்சாட்டு

8) நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் கே பி சர்மா ஒலி - 21 அமைச்சர்களும் பதவியேற்பு - பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

9) கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் - இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா.
ماه قبل در تاریخ 1403/04/25 منتشر شده است.
1,390 بـار بازدید شده
... بیشتر