எனக்காக இறைவா எனக்காக சிலுவைபாதை பாடல் ||WAY OF THE CROSS ENAKAGA IRAIVA ENAKAGA ||Lent Season songs

Pathuvai Anthoniyar
Pathuvai Anthoniyar
2.3 هزار بار بازدید - 4 سال پیش - Listen to The Super Hit
Listen to The Super Hit Tamil Christian Traditional Songs | Golden Hits | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள்
*******************************************************************************************************
The Lyrics Of The Song Is Given Below !!!

பழிகளை சுமத்திப் பரிகசித்தார் எனக்காக இறைவா எனக்காக |
சிலுவப்பாதை பாடல் |
Lent Season songs Tamil

இந்தப் பாடலுக்கு உருகாதவர்கள் யாருமே இருக்க இயலாது.
சிலுவைப்பாதை என்றாலே நம் நினைவுக்கு வருவது இந்தப்பாடல் தான் என்றால் அது மிகையாகாது


1. பழிகளை சுமத்திப் பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்

5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தம்மை உம்மோடு

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்

10. உடைகள் களைந்திட உமைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

11. பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு

13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலினை மடி சுமந்து

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று

For More Christian songs
Subscribe our Pathuvai Anthoniyar YouTube Channel


*******************************************************************************************************

You can like us at : Facebook Account
Facebook: antonys.church.90



please Like Share Subscribe To this Channel guys !!
Please Mention  Your Valuable Comments In The Comment Section.
4 سال پیش در تاریخ 1399/02/24 منتشر شده است.
2,382 بـار بازدید شده
... بیشتر