திருச்சியில் சாக்கடை கால்வாய்களில் துார் வாரும் பணி - எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல்

Tamilar Kalam
Tamilar Kalam
1 بار بازدید - 3 سال پیش - திருச்சி ஜீன் 09திருச்சியில் சாக்கடை கால்வாய்களில்
திருச்சி ஜீன் 09

திருச்சியில் சாக்கடை கால்வாய்களில் துார் வாரும் பணி - எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியை மேற்கொள்ளும் முன் களப்பணியாளர்கள்

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் மழைக் காலத்திற்கு முன்பாக அனைத்து சாக்கடைகளும் தூர்வார வேண்டும் என தெரிவித்ததை தொடர்ந்து மாநகராட்சி மூலமாக பணிகள் வேகம் எடுத்து வருகிறது. முன் களப்பணியாளர் என்று கூறப்படும் மாநகராட்சி ஊழியர்கள் திருச்சி உள்ள 4 கோட்டங்களில்  சாக்கடைகளில் உள்ள மண்னை  அள்ளி தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இப்பணியில் மேற்கொண்டு வரும் அந்த முன் களப் பணியாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கப்படாமல் கைகளில் கையுறை அணியாமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் நோய்த்தொற்றும்  
ஏற்படும்  அபாயம்
உள்ளது.

இந்நிலையில்
திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்

திருச்சி மாநகராட்சியில் மழை காலத்தை முன்னிட்டு மழைநீர் வாடிகால் கால்வாய்களில் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில்
30மழைநீர் வடிகால் வாய்க்கால்கள்
2870 மீட்டர் நீளம், ஸ்ரீரங்கம் கோட்டத்தில்
11மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 755 மீட்டர் நீளம்,  பொன்மலை கோட்டத்தில் 16 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 3920 மீட்டர் நீளம்,

அரியமங்கலம்
கோட்டத்தில் 23 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 2538 மீட்டர் நீளம் என மொத்தம் 10 ஆயிரத்து 083 மீட்டர் நீளம் தூர் வாரப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின்படி மழைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முன் களப்பணியாளர்கள் என்று அறிவிக்கப்பட்ட இவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் நடைபெறும் பணிகளை உடனடியாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பார்வையிட்டு உரிய உபகரணங்களை வழங்கி பணியை துரிதப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அறிவுறுத்துகின்றனர்.

Trichy jk
3 سال پیش در تاریخ 1400/03/18 منتشر شده است.
1 بـار بازدید شده
... بیشتر