ஜேசுதாஸின் இனிமையான பாடல்கள் | K.J. Yesudas | #kjyesudas #tamilsongs #cnkcreationindia CCI-55

CNK Creation India
CNK Creation India
390.1 هزار بار بازدید - پارسال - @cnkcreationindia  
@cnkcreationindia   #cnkcreationindia #kjyesudas #tamilsongs

♪ உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால்..
♪ நல்ல மனம் வாழ்க நாடு போற்ற.....
♪ மலரே குறிஞ்சி மலரே தலைவன்.....
♪ தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு.....
♪ வானம்மென்னும் வீதியிலே.....
♪ மனைவி அமைவதெல்லாம் இறைவன்
♪அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய...

கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (K. J. Yesudas) (மலையாளம்: കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் எட்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.

பிலிம்பேர் விருதுகள் தெற்கு ஐந்து முறை பெற்றவர். சிறந்த பின்னணிப் பாடகருக்கான மாநில விருது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் அரசுகள் கொடுத்த விருதுகளை நாற்பத்து மூன்று முறை பெற்றவர். இவர் கலைகளுக்கு செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசால் இவருக்கு 1975 இல் பத்மஸ்ரீ , 2002 இல் பத்ம பூஷண், மற்றும் 2017 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் (இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருது) வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இசைத் துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக சிஎன்என்-ஐபிஎன் சிறந்த சாதனை விருதை யேசுதாசுக்கு வழங்கி கௌரவித்தது. 2006-ஆம் ஆண்டில், சென்னையின் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில் 16 திரைப்படப் பாடல்களைப் பாடினார். இந்த பாராட்டுகள் மற்றும் அங்கீகாரங்களின் விளைவாக, இவர் இந்திய இசை வரலாற்றில் மிகச் சிறந்த பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.
پارسال در تاریخ 1402/02/10 منتشر شده است.
390,184 بـار بازدید شده
... بیشتر