வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணமாக்குவது எப்படி

Sri Chakra Health Care
Sri Chakra Health Care
72.9 هزار بار بازدید - 7 سال پیش - உடலில் உள்ள இயல்பான இரத்த ஓட்டம்
உடலில் உள்ள இயல்பான இரத்த ஓட்டம் கால்களில், சீரற்ற நிலையில் தடைபட்டு இயங்குவதே, இந்த வியாதிக்கு மூல காரணமாக அமைகிறது. இரத்த நாளங்களில் உள்ள சுரப்பிகளின் தளர்ச்சிகளால், இரத்தம் பின்னேறி, ஒரு நிலையில், அதிக இரத்த தேக்கம் காரணமாக, எதிர் திசையில் பயணித்து, இரத்த நாளங்கள் உப்பிவிடுகின்றன.. இதுவே, வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டல் வியாதியாக அறியப்படுகிறது. நரம்புச்சுருட்டலுக்கு காரணம். வெரிகோஸ் வெயின் பரம்பரை வியாதியாக அறியப்பட்டாலும், நரம்புச்சுருட்டலுக்கு வேறு பல காரணங்களும் உள்ளன. அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள், நாவிதர்கள், சலவைத்தொழிலாளர், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வோர், காவலாளிகள், சீருடைப்பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய வேலைகளில் இருப்பவர்களை, அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் காணப்படும் நரம்புச்சுருட்டல், மகப்பேறுக்கு பின்னர், இயல்பாக மறைந்துவிடுகிறது. அரிதாக சிலருக்கு, உடலில் அடிபட்டாலோ அல்லது இரத்த காயங்களாலோ வர வாய்ப்பிருக்கிறது. மேலும், நாள்பட்ட மலச்சிக்கலும், காரணமாக இருக்கிறது. வெளியில் காண இயலாத நரம்புச்சுருட்டலை எவ்வாறு அறிவது? தொடைப்பகுதிகளில், நரம்புகள் சுருண்டு, கட்டிகள் போல காணப்படும். சிலருக்கு, பாதம் மரத்து போகும், கால்களில் வலி, கணுக்கால் மற்றும் கால்கள் வீங்கும் நிலை உண்டாகும். சமயங்களில், இரத்த நாளங்களின் வெடிப்பில் இரத்த கசிவு ஏற்பட்டு அதனால், வலிகள் உண்டாகலாம். மேலும், சிலருக்கு சரும வியாதிகள் ஏற்படக்கூடும். Varicose veins are gnarled, enlarged veins. Any vein may become varicose, but the veins most commonly affected are those in your legs and feet. That's because standing and walking upright increases the pressure in the veins of your lower body. For many people, varicose veins and spider veins — a common, mild variation of varicose veins — are simply a cosmetic concern. For other people, varicose veins can cause aching pain and discomfort. Sometimes varicose veins lead to more-serious problems. Varicose veins may also signal a higher risk of other circulatory problems. Treatment may involve self-care measures or procedures by your doctor to close or remove veins. SAKTHI FERTILITY & TEST TUBE BABY CENTER SriChakra Hospital, 4/147,Nehru street , Udumalpet, Trippur, Tamilnadu - 642 126 Helpline: 96 26 700 900, 9626200600, 04252 220022. Visit @ www.sakthifertility.com/ Email: [email protected] Youtube: sakthifertility Facebook: sakthifertility Google+: sakthifertility
7 سال پیش در تاریخ 1397/02/02 منتشر شده است.
72,948 بـار بازدید شده
... بیشتر