தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர,Thanga ratham ontru ingu asainthu vara song,murugan song,

Mettu puthusu
Mettu puthusu
32.2 هزار بار بازدید - 10 ماه پیش - முருகா முருகா வேல் முருகா முருகா
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர
செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க
நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன்
நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்

முருகா முருகா வேல் முருகா

முருகா முருகா வேல்முருகா

தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்க
தென்பழநி வலம் வரும் தங்கரதமாம்
தங்கரதம் மீதமர்ந்து கொலுவிருக்கும்
தண்டபாணித் தெய்வமே சரணமய்யா

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

பன்னீரும் சந்தனமும் பாற்குடமாம்
பஞ்சாமிர்தம் விபூதி அபிழேகம்
கொஞ்சுதமிழ் பாலனுக்கு பழனியிலே
கோடி கண்கள் வேனுமய்யா காண்பதற்கே

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா


காவடிகள் உன்னை தேடி ஆடி வரும்
கால் நடையாய் பக்தர் கூட்டம் கோடி வரும்
சேவடியே சரணமென வாழ்பவர்கே
செல்வவளம் தந்தருளும் கந்தவனே

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா

கொக்கரக்கோ சேவல் ஒன்று கூவிவர
கோலமயில் நின்று நடமாடி வர
சுப்பையா நானடிமை பாடிவர
சொக்கன் மகன்நீ அதனைக் கேட்டு வர

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்
செந்தில் வளர் கந்தனிடம் தூது விடுத்தேன்
அந்தமிரு குகன் நெஞ்சில் இடம் பிடித்தேன்
ஆறுமுகன் பேரழகை படம் பிடித்தேன்

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா


வண்ண மயில் வாகனத்தில் வேல் முருகன்
வள்ளி தெய்வயானையுடன் மால்மருகன்
தென்னகத்தில் வாழுகின்ற சிலையழகன்
எண்ணகத்தில்காட்சிதந்தான்
கலையழகன்

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல முருகா


வெண்ணீறும் நெற்றியிலே பளபளக்க
வெண்ணிலவு கண்களிலே சிலுசிலுக்க
பன்னீரும் மார்பினிலே கமகமக்க
பார்வதியின் பாலன் வந்தான் மனம்களிக்க

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

ஓராறு முகம்கொண்ட உளம் மகிழ்ந்தேன்
ஈராறு விழி கண்டேன் எனை மறந்தேன்
சீராளன் உரு கண்டு செயலிழந்தேன்
செந்தாமரை பாதத்திலே சரணடைந்தேன்

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா

முருகாயென அழைத்தேன் முறுவல் கண்டேன்
குமராயென அழைத்தேன் குளுமை கண்டேன்
கந்தாயென அழைத்தேன் களித்து நின்றான்
கடம்பாயென அழைத்தேன் களித்து நின்றான்

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

பழனிபரங்குன்றம் திருச்செந்தூர்
பழமுதிர் சோலையுடன் சுவாமிமலை
அழகிய திருத்தணிகை மருதமலை
ஆலயங்கள் யாவும் காட்டுவித்தான்


முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

நல்ல தமிழ்ச் சொல்லெடுத்து நாளும் பாடு
நம் தலைவன் முருகனையே நாடி ஓடு
வல்ல கதிர் வேலவனும் வள்ளியோடு
வந்து நலம் தந்தருள்வான் வகையோடு

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

அஞ்சு வகைக் கனியெடுத்து அமுது செய்வோம்
ஆறுமுகன் மேனியிலே தொழுது பெய்வோம்
கொஞ்சும் எழில் குமரனுக்கு பூக்கள் கொய்வோம்
கூறு தமிழ்ச் சொல்லெடுத்து பாக்கள் நெய்வோம்

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

தண்ணாரும் பழனிமலை நடந்து செல்வோம்
சாலைவழி துன்பமெல்லாம் கடந்து செல்வோம்
கண்ணான முருகனையே கொஞ்சி மகிழ்வோம்
கருணை மழை பொழிகவென கெஞ்சி கேட்போம்

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

கல்லழுத்தி தாரரித்து தோலும் தேயும்
காலிரண்டும் கொப்பளித்து கன்றிப்போகும்
வெல்லமென கந்தனவன் பெயரைக்கூவ
வேதனைகள் தீர்ந்து நடை வேகம் கூடும்

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா

கந்தனையே சொந்தமென எண்ணும்போது
கவலையென்னும் கடலதுவும் வற்றிப்போகும்
சிந்தனையில் தெளிவுவரும் செல்வம் சேரும்
செருமுனையில் பகையழிந்து வெற்றி கூடும்

முருகா முருகா வேல்முருகா
முருகா முருகா வேல் முருகா

அண்ணனுக்கும் யானையெனும் மாறுதலை
அப்பனுக்கும் கங்கையெனும் மாறுதலை
சண்முகனாம் கந்தனுக்கும் மாறுதலை
தந்தருல்வான் எந்தனுக்கும் ஆறுதலை

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா

அன்பு செய்ய சக்தியெனும் அன்னையுண்டு
ஆலமுண்ட கண்டனெனும் தந்தையுண்டு
தன்வயிறு சாய வரும் அண்ணனுன்டு
சாரங்கபானியெனும் மாமனுண்டு

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா

ஆடகத்தில் செய்ததொரு தேருமுண்டு
அழகுமிகு தோரணங்கள் யாவுமுண்டு
ஆடிவர தோகைமயில் தாணுமுண்டு
ஆதி சக்தி தந்ததொரு வேலுமுண்டு

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா

கட்டியங்கள் கூவிவர சேவலுண்டு
கடம்பனுடன் இடும்பனுமே காவலுண்டு
கட்டிவரும் காவடிகள் ஆடலுண்டு
கறந்தபசும் பால்குடங்கள் கூடவுண்டு

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா  வேல் முருகா

பார்புகழும் ஆறுபடை வீடும் உண்டு
பட்டாடை ஆபரணம் கோடி உண்டு
மார்பிணிலே கடம்ப மலர் மாலை உண்டு
மணியிணையும் செஞ்சதங்கை காலிலுண்டு

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா

வள்ளிமயில் தெயவனை கொஞ்சலுண்டு
மாமலைகள் எங்கெங்கும் மஞ்சமுண்டு
உள்ளுருகி அடியவர்கள் கெஞ்சலுண்டு
உனையென்றும் மறவாத நெஞ்சமுண்டு

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா


சேவற்கொடி கொண்ட வடிவேலனுக்கு
தேவையான யாவும் உண்டு என்று சொல்லும்
சேவுகனின் கவியெடுத்து பாடி வருவார்
சிங்கார வேலன் அருள் நாளும் பெறுவார்

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்  முருகா...
10 ماه پیش در تاریخ 1402/07/24 منتشر شده است.
32,281 بـار بازدید شده
... بیشتر