கார்த்திகை மைந்தா || Karthigai Maindha || Thirumurugan Suprabhatham || Vijay Musicals

Vijay Musical
Vijay Musical
249.3 هزار بار بازدید - 6 سال پیش - பாடல் : கார்த்திகை மைந்தா ||
பாடல் : கார்த்திகை மைந்தா || ஆல்பம் : திருமுருகன் சுப்ரபாதம் || பாடியவர் : கிருஷ்ணராஜ் || இயற்றியவர் : செங்கதிர்வாணன் || இசை : கண்மணிராஜா || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல்கள் || விஜய் மியூஸிக்கல்ஸ் || Karthigai Maindha || Thirumurugan Suprabhatham || Singer : Krishnaraj || Lyrics : Senkathirvanan || Music : Kanmaniraja || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Songs || Vijay Musicals

பாடல்கள் || SONGS :

கார்த்திகை மைந்தா வேல்முருகா கணிந்தருள் செய்வாய் வேல்முருகா
போற்றிடவந்தோம் வேல்முருகா  புண்ணியம் சேர்ப்பாய் வேல்முருகா

வேல்முருகா திருவேல்முருகா வெற்றிகள் தருவாய் மால்மருகா
வேல்முருகா திருவேல்முருகா வெற்றிகள் தருவாய் மால்மருகா

சக்தியின் பிள்ளை வேல்முருகா சண்முகநாதா வேல்முருகா
பக்தியில் உன்னை வேல்முருகா பணிந்திட வந்தோம் வேல்முருகா

உத்தமர் போற்றும் வேல்முருகா உன்னடிபணிவோம் வேல்முருகா
சித்தம் குளிர்வாய் வேல்முருகா செய்திடுவாயருள் வேல்முருகா

அறுமுகன் நீயே வேல்முருகா அரவணைப்போனே வேல்முருகா
கருணையின் வடிவே வேல்முருகா களிப்புறச் செய்வாய் வேல்முருகா

திருமுகம் காட்டி வேல்முருகா தீவினை மீட்கும் வேல்முருகா
ஒருதரம் உன்னை வேல்முருகா வணங்கிட நன்மை வேல்முருகா

அறிவினைப் பேருக்கும் வேல்முருகா அன்பினை வளர்ப்பாய் வேல்முருகா
பெருமைகள் சேர்ப்பாய் வேல்முருகா பிழைகளை களைவாய் வேல்முருகா

குருபரன் நீயா வேல்முருகா குமரனும் நீயே வேல்முருகா
வரும்வினைத் தீர்க்கும் வேல்முருகா வளமுடன் காப்பாய் வேல்முருகா

குறமகள் வள்ளியை மணம்முடித்தாயே வேல்முருகா
சமநிலை ஓங்கிட வேல்முருகா நெறிதனை வகுத்தாய் வேல்முருகா

சூரனை வென்றாய் வேல்முருகா சோதனைத் தீர்த்தாய் வேல்முருகா
மாமயிலேறி வேல்முருகா வலம்வருவோனே வேல்முருகா

கணபதி இளையோன் வேல்முருகா கருணைபுரிவாய் வேல்முருகா
துணைவருவாயே வேல்முருகா தொழுதிடுவோமே வேல்முருகா

அறுபடைவீடு வேல்முருகா அழகுடன் கொண்டாய் வேல்முருகா
திருவருள் செய்திட வேல்முருகா எழிலுடன் நின்றாய் வேல்முருகா

ஆறெழுத்தோனே வேல்முருகா அபயம் தருவாய் வேல்முருகா
தேரிழுப்போமே வேல்முருகா திருவடிப் பணிந்தே வேல்முருகா

சீறிடும் பகைமை வேல்முருகா சிதறிட வைப்பாய் வேல்முருகா
கூறிடும் அன்பில் வேல்முருகா ஒன்றிட வேண்டும் வேல்முருகா

பூவுலகெங்கும் வேல்முருகா புதுமைகள் பரவிட வேல்முருகா
நீயருள் செய்வாய் வேல்முருகா நின்தழல் பணிந்தோம் வேல்முருகா

வானவர் போற்றும் வேல்முருகா வடிவழகோனே வேல்முருகா
தேனமுதான வேல்முருகா தீந்தமிழ்த் தந்தாய் வேல்முருகா

சுப்ரமண்யனே வேல்முருகா சொக்கிடும் எழிலே வேல்முருகா
செப்பிடும் போதே வேல்முருகா செந்தேன் ஊறிடும் வேல்முருகா

கங்கையின் புதழ்வா வேல்முருகா கைகொடுப்பாயே வேல்முருகா
கையினில் கூசம் வேல்முருகா தாழ்பணிவோமே வேல்முருகா

மாமலை மருதம் வேல்முருகா மகிழ்வுடன் கண்டாய் வேல்முருகா
காவலும் நீயே வேல்முருகா கைதொழுவோமே வேல்முருகா

தண்டம் ஏந்தி வேல்முருகா தனித்திருப்போனே வேல்முருகா
குன்றம் நாடி வேல்முருகா குடியிருப்போனே வேல்முருகா

குகன் வடிவோனே வேல்முருகா கும்பிடவந்தோம் வேல்முருகா
மகிழ்வினையளிப்பாய் வேல்முருகா மலரடிப் பணிந்தோம் வேல்முருகா

கோதண்டபாணி வேல்முருகா குலத்தைக் காப்பாய் வேல்முருகா
பாதம் பணிந்தோம் வேல்முருகா பழநியாண்டவா வேல்முருகா

செந்தில்நாதர் வேல்முருகா செய்திடுவாயருள் வேல்முருகா
உந்தன் நாமம் வேல்முருகா உரைத்திட வந்தோம் வேல்முருகா

முத்துகுமாரா வேல்முருகா மோகனவடிவே வேல்முருகா
முக்தியைத் தருவாய் வேல்முருகா முன்வினைத் தீர்ப்பாய் வேல்முருகா
6 سال پیش در تاریخ 1397/03/02 منتشر شده است.
249,397 بـار بازدید شده
... بیشتر